மூத்தோர் உலகக் கோப்பை: இந்திய அணியில் ‘ஸ்டேன்ஸ் பள்ளி’யின் முன்னாள் மாணவர்கள்!

By ஆர்.ஆதித்தன்

கோவை: வெடரன் கிரிக்கெட் இந்தியா (வி.சி.ஐ.) அமைப்பு முதல் முறையாக 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக்கோப்பை 45 ஓவர் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடத்துகிறது. இதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, அயர்லாந்து (வேல்ஸ்), கனடா ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இப்போட்டியில் பங்கேற்க தேர்வான 16 பேர் கொண்ட இந்திய அணியில் கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்டேன்ஸ் பள்ளியில் படித்த 3 முன்னாள் மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

ஸ்டேன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர் ஹேமச்சந்திரன் எம்.நாயர் (74), இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்தராவ் (73) விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகவும், டாக்டர் ஜெயக்குமார் (71) பேட்ஸ்மேனாகவும் தேர்வாகி உள்ளனர். இவர்களும், ஸ்டேன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

டாக்டர் ஜெயக்குமார், ஹேமச்சந்திரன் எம்.நாயர்.

இதுதொடர்பாக, கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் பிறந்து, ஸ்டேன்ஸ் பள்ளியில் பயின்ற ஹேமச்சந்திரன் எம்.நாயர் கூறியதாவது: நான் ஸ்டேன்ஸ் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் விளையாட தொடங்கினேன்.

பின்னர் சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, அந்தமான் நிகோபார் தீவில் மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியாற்றினேன். அங்கு, மின்சாரத் துறை கிரிக்கெட் அணிக்காக விளையாடினேன். அங்குள்ள இந்திய ராணுவம், இந்திய கப்பல் படை, நிகோபார் அணி என பல்வேறு அணிகளுடன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினேன்.

பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டேன். இப்போது 70 வயதுக்கு மேற்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். கேரள கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரசேகர், மூத்தோர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

கடந்த 3 மாதங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது ஸ்டேன்ஸ் பள்ளியின் முதல்வராக இருந்த ஃபெளலர் என்பவர்தான் கிரிக்கெட் விளையாட எங்களை ஊக்கப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது, என்றார்.

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன்புதூரை சேர்ந்த டாக்டர் ஜெயக்குமார் கூறியதாவது: நான் ஸ்டேன்ஸ் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் மற்றும் ஹாக்கி மிகவும் ஆர்வத்துடன் விளையாடி வந்தேன். கிரிக்கெட் மற்றும் ஹாக்கி என இரு விளையாட்டுகளிலும் பள்ளி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டேன்.

காது, மூக்கு, தொண்டை பிரிவில் எம்.டி. முடித்துவிட்டு, பொள்ளாச்சியில் கிளினிக் நடத்தி வருகிறேன். நான் மருத்துவத் துறையில் இருந்தாலும், கிரிக்கெட், ஹாக்கி விளையாடுவதை தொடர்ந்து வருகிறேன். இப்போது 70 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் இந்திய அணிக்காக தேர்வாகி உள்ளேன். கடந்த 3 மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறேன். உலகக்கோப்பையில், என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன், என்றார்.

கோவை விவேகாலயா கல்விக் குழுமத்தின் அறக்கட்டளை நிர்வாகி ஆனந்தராவ் கூறியதாவது: நான் 10 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். ஸ்டேன்ஸ் பள்ளியில் படிக்கும்போது பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் 100 ரன்கள் அடித்து சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டேன். தாம்பரம் எம்.சி.சி. கல்லூரியில் படிக்கும்போதும் கிரிக்கெட்டை தொடர்ந்தேன்.

சென்னையில் இருந்தபோது தமிழ்நாடு கிரிக்கெட் கோல்ட்ஸ் அணிக்காக மும்பை சென்று சிறந்த அணிகளுடன் விளையாடி உள்ளேன். கல்லூரி படிப்புக்குப் பிறகு தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். ஸ்குவாஷ் போட்டிகளிலும் முன்னணி வீரர்களுடன் விளையாடி உள்ளேன்.

அவ்வப்போது கிரிக்கெட் விளையாடி வந்தேன். இப்போது 70 வயதுக்கு மேற்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எஸ்.என்.ஆர். கிரிக்கெட் மைதானத்தில் 3 மாதங்களாக வலைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்