ஆஸ்திரேலிய 20 வயது புதுமுகம் கூப்பர் கனோலி... - பாட் கமின்ஸ் ‘ட்ராப்’ ஏன்? @ இங்கிலாந்து தொடர்

By ஆர்.முத்துக்குமார்

ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் புதுமுக வீரர் கூப்பர் கனோலி என்பவர் இடம்பிடித்துள்ளார். இவர் ஒரு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்.

அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக தொடக்கத்தில் இறங்கி செம்ம காட்டுக் காட்டிய வலது கை இளம் அதிரடி மன்னன், வருங்கால சூப்பர் ஸ்டார் ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆஸ்திரேலியா டி20 மற்றும் ஒருநாள் அணி இரண்டிலும் தேர்வாகியுள்ளார்.

செப்டம்பர் தொடக்கத்தில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து அணிகளுடன் மிட்செல் மார்ஷ் தலைமை ஆஸ்திரேலியா அணி தலா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றது. ஒரு நாள் அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியைக் கருத்தில் கொண்டு நிலையான அணியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டி20 புதுமுகமான கூப்பர் கனோலிக்கு வயது 20 தான் ஆகிறது. பிக்பாஷ் டி20 லீகில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2022-23 பிபிஎல் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் இறுதிக்குள் நுழைய பெரும் பங்களிப்பு செய்தவர் கூப்பர் கனோலி. பேட்டிங்கில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 145-150 என்று உள்ளது. இதோடு இடது கை ஸ்பின்னரும் கூட.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் கடினமான ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் இறுதிப் போட்டியில் தன் அறிமுகப் போட்டியிலேயே 90 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். மொத்தமே அனைத்துக் கிரிக்கெட் பார்மெட்களிலும் சேர்த்து 20 போட்டிகளில்தான் ஆடியுள்ள இளம் வீரர் ஆவார் கூப்பர் கனோலி.

இதற்கிடையே, இந்த இரண்டு தொடர்களிலும், ஒருநாள் தொடரிலும்கூட பாட் கமின்ஸ் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். பாட் கமின்ஸ் இல்லாததால் ஒருநாள் அணிக்கும் மிட்செல் மார்ஷ்தான் தலைமை வகிக்கிறார்.

டி20 உலகக் கோப்பையில் இருந்து சொதப்பிய ஆஷ்டன் ஆகர் மற்றும் மேத்யூ வேட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். வார்னர் ஓய்வு பெற்றுவிட்டதால் இளம் வீரர் மெக்கர்க் அணியில் வார்னரின் அதிரடி வழிதோன்றலாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெக்கர்க் இன்னும் டி20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை. ஆனால் 2 ஒருநாள் போட்டிகளில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆடியுள்ளார்.

டி20 அணியில் சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லிஸ் வேகப்பந்து வீச்சாளர் இடத்தை நிரப்பியுள்ளனர். ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி ஆகியோர் இரு அணிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்காட்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விகீ), ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட் ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்