ஈரோடு: பிரான்ஸில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர்செல்வம் - சரண்யா தம்பதியின் மகன் ப.இனியன். 6 வயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இனியன், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தொடங்கி சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றார். பல்வேறு சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்ற இனியன் 2,513 புள்ளிகள் பெற்று, இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டரானார்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் நடந்த செஸ் போட்டிகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை இனியன் பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, பிரான்ஸ் நாட்டின் லா பிளாக்னே நகரில் கடந்த 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடந்த, ‘லா- பிளாக்னே ஓபன் 2024’ சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்றார். இப்போட்டியில் 17 கிராண்ட் மாஸ்டர்கள், 40 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த184 வீரர்கள் பங்கேற்றனர்.
9 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில், 6 சுற்றுகளில் வெற்றி, 2 சுற்றுகளில் டிரா, ஒரு சுற்றில் தோல்விஎன 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தை சமன் செய்தார். டை-பிரேக்கர் முறையில் இந்த போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்து கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இப்போட்டியில், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் ஜியல்ஸ் முஸ்ஸர்ட் முதலிடமும், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ராஜா ரித்விக் 2-வது இடமும் பெற்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago