யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்: இங்கிலாந்தை ஃபைனலில் வீழ்த்தியது

By செய்திப்பிரிவு

பெர்லின்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தி இருந்தது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் கவனம் விளையாடின. இருந்த போதும் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. முதல் பாதி ஆட்ட நேரத்தில் சுமார் 70 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின்.

இந்த சூழலில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. 47-வது நிமிடத்தில் அற்புதமான கோல் பதிவு செய்தார் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ். தரையோடு தரையாக சென்ற அந்த பந்து கோல் ஆனது. லாமின் யாமல் பந்தை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் பாஸ் செய்து இருந்தார். அதனை வில்லியம்ஸ் பயன்படுத்திக் கொண்டார்.

60-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக ஆலி வாட்கின்ஸ் உள்ளே வந்தார். அதே போல 70-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்காக மாற்று வீரராக பால்மர் உள்ளே வந்தார். இடையில் ஸ்பெயின் கேப்டன் மொராட்டா சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டார்.

73-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மர் கோல் பதிவு செய்தார். பாக்ஸுக்கு வெளியே சில மீட்டர் தொலைவில் இருந்து பலமாக ஓங்கி உதைக்கப்பட்ட அந்த ஷாட் கோல் ஆனது. சுமார் 118 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து கோல் போஸ்ட்டுக்குள் சென்றது. அதன் மூலம் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. அதற்கு இங்கிலாந்து வீரர் பெல்லிங்ஹம் உதவி இருந்தார்.

தொடர்ந்து ஸ்பெயின் அணி அட்டாக்கிங் ஆட்டத்தை முன்னெடுத்தது. அதன் பலனாக 86-வது நிமிடத்தில் குர்குலே பாஸ் செய்த பந்தை ஸ்பெயினின் மைக்கெல் கோல் ஆக்கினார். இவர் மொராட்டாவுக்கு மாற்றாக களத்துக்கு வந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் டைம் நிறைவடைந்ததும் இறுதி விசில் அடிக்கப்பட்டது. அதன் மூலம் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது உறுதியானது.

நான்கு முறை யூரோ கோப்பை வென்ற ஸ்பெயின்: யூரோ தொடரில் முறையே 1964, 2008, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணியாகவும் உருவெடுத்துள்ளது.

நடப்பு தொடரில் குரோஷியா, இத்தாலி, அல்பேனியா அணிகளை குரூப் சுற்றிலும், ஜார்ஜியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை நாக் அவுட் சுற்றிலும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின். இந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் பதிவு செய்துள்ளது. யூரோ தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. களத்தில் துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணியாக ஸ்பெயின் உள்ளது.

தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 17 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார். இங்கிலாந்து அணி அடுத்தடுத்து இரண்டு யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்