TNPL: சேலம் ஸ்பார்ட்டன்ஸை 35 ரன்களில் வீழ்த்திய திருச்சி கிராண்ட் சோழாஸ்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தி்ல் அமைந்துள்ள மைதானத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.15 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷிஜித் சந்திரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் சார்பி்ல் அர்ஜூன் மூர்த்தி, வாசிம் அகமது தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அர்ஜூன் மூர்த்தி 11 ரன்களிலும், வாசிம் அகமது 19 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ஷியாம் சுந்தர் 19 ரன்களும், ஜாபர் ஜமால் 32 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராஜ்குமார் 18, சரவணகுமார் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தனர். பந்துவீச்சில் சேலம் அணியின் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த சேலம் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் 10 ரன்கள், கவின் 13 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ராஜேந்திரன் விவேக் 33 ரன்களும், சந்திரன் 6 ரன்களும் எடுத்தனர். முகமது ஆதன் கான் 40, விஷால் வைத்யா 10, சன்னி சாந்து 29, ஹரிஷ்குமார் 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதையடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE