விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பர்போரா கிரெச்சிகோவா!

By செய்திப்பிரிவு

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பர்போரா கிரெச்சிகோவா. இது அவர் வென்றுள்ள இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.

28 வயதான செக் குடியரசு வீராங்கனையான பர்போரா கிரெச்சிகோவா, சனிக்கிழமை அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின்‌ பவ்லினியை 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரிலும் ஜாஸ்மின்‌ பவ்லினி இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.

இந்த ஆட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்றது. இதில் முதல் மற்றும் மூன்றாம் செட்களை பர்போரா கிரெச்சிகோவா வென்றார். இரண்டாவது செட்டை ஜாஸ்மின்‌ வென்று இருந்தார்.

“இப்போது என்னால் பேச முடியவில்லை. இது எனது டென்னிஸ் கரியரின் சிறந்த நாள். என் வாழ்வின் பொன்னான நாள். இது சிறந்த இறுதிப் போட்டியாக இருந்தது. ஜாஸ்மின் மற்றும் அவரது குழுவினருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதியில் விளையாடி இருந்தார்” என வெற்றிக்கு பிறகு பர்போரா கிரெச்சிகோவா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE