மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 41.4ஓவர்களில் 121 ரன்களுக்குஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மைக்கேல் லூயிஸ் 27, கவேம் ஹாட்ஜ் 24, அலிக் அத்தானஸ் 23 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 371 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஸாக் கிராவ்லி 76, ஜேமி சுமித் 70, ஜோ ரூட் 68, ஆலி போப் 57, ஹாரி புரூக் 50 ரன்கள் எடுத்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

250 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 34.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது. கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 4, மைக்கேல் லூயிஸ் 14, கிர்க்மெக்கென்சி 0, அலிக் அத்தனாஸ் 22, கவேம் ஹாட்ஜ் 4, ஜேசன் ஹோல்டர் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோஷ்வா டி சில்வா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 47 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோஷ்வாடி சில்வா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி சுமித்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து அல்சாரி ஜோசப் (8), ஷாமர் ஜோசப் (3), ஜெய்டன் சீல்ஸ் (8) ஆகியோர் கஸ் அட்கின்சன் பந்தில் நடையை கட்டினர். குடகேஷ் மோதி 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. அந்த அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 5, ஜேம்ஸ் ஆண்டர்சன் 3, பென்ஸ்டோக்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இரு இன்னிங்ஸையும் சேர்த்து 12 விக்கெட்கள் வேட்டையாடிய கஸ் அட்கின்சன் ஆட்ட நாயகனாக தேர்வானார். இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

78 வருடங்களுக்குப் பிறகு... மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 12 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் 78 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை அட்கின்சன் பெற்றுள்ளார். கடைசியாக 1946-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அலெக் பெட்சர் 11 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

ஓய்வு பெற்றார் ஆண்டர்சன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன். 41 வயதான அவர், தனது கடைசி இன்னிங்ஸில் 32 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஆண்டர்சன் 704 விக்கெட்களுடன் தனது 21 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர், அறிமுகமாகியிருந்தார். இதே மைதானத்தில் தற்போது விடைபெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்