பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்விட்சர்லாந்தை வென்ற இங்கிலாந்து | Euro Cup காலிறுதி

By செய்திப்பிரிவு

டசெல்டார்ஃப்: நடப்பு யூரோ கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜெர்மனியின் டசெல்டார்ஃப் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் சமமான செயல்பாட்டை களத்தில் வெளிப்படுத்தின. முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் பதிவு செய்தன.

ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தின் எம்போலோ கோல் பதிவு செய்தார். அதற்கான பதில் கோலை 80-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதிவு செய்தது. பெனால்டி பகுதிக்கு அருகில் இருந்து இங்கிலாந்தின் ஸாகா அடித்த ஷாட் கோல் ஆனது. அதன் பிறகு 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் நேரத்திலும் இரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

அதனால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 5-3 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. முதல் வாய்ப்பை ஸ்விட்சர்லாந்து மிஸ் செய்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது. அந்த அணி துருக்கி அல்லது நெதர்லாந்து அணியுடன் அரையிறுதியில் விளையாடும். மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாடுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்