“நாங்கள் பேட்டிங்கில் சோபிக்க தவறினோம்” - தோல்வி குறித்து கேப்டன் ஷுப்மன் கில்

By செய்திப்பிரிவு

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த ஆட்டத்துக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது.

“நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். இருந்தும் எங்களது தரத்துக்கு ஏற்ற வகையில் நாங்கள் பேட் செய்யவில்லை. களத்தில் நேரம் எடுத்து ஆட வேண்டுமென பேசி இருந்தோம். ஆனால், அந்த வகையில் எங்களது ஆட்டம் அமையவில்லை. இலக்கை விரட்டிய போது விக்கெட்டுகளை விரைந்து இழந்திருந்தோம்.

இறுதி வரை நான் களத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நான் ஆட்டமிழந்த விதம் ஏமாற்றம் தந்தது. அதன் பிறகு ஆட்டம் மாறியது. 115 ரன்களை விரட்டும் போது உங்களது 10-வது பேட்ஸ்மேன் களத்தில் இருக்கிறார் என்றால் ஏதோ சிக்கல் இருக்கிறது என்றே அர்த்தம்” என ஷுப்மன் கில் தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட் உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி ஷுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொன்று 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே பயணித்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 13 ரன்களில் தோல்வியை தழுவியது. நாளை இந்த தொடரின் இரண்டாவது போட்டி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE