பெனால்டி ஷூட் அவுட்டில் அசத்தல்: ஸ்லோவேனியா அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

By செய்திப்பிரிவு

பிராங்ஃபர்ட்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் ஸ்லோவேனியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல் அணி.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பிராங்ஃபர்ட் நகரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றுஆட்டத்தில் போர்ச்சுகல் - ஸ்லோவேனியா அணிகள் மோதின. 13-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் பெர்னார்டோ சில்வா அடித்த பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டா தலையால் முட்டி கோலாக மாற்ற முயன்றார். ஆனால்பந்து இடதுபுறம் விலகிச் சென்றது. எனினும் அங்கு நின்ற பெர்னாண்டஸ் அதை கோலாக மாற்றத் தவறினார்.

31-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டா தலையால் முட்டிய பந்து ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக்கின் கைகளில் தஞ்சம் அடைந்தது. அடுத்த நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரபேல் லியாவோ பந்தை விரைவாக கடத்திச் சென்ற நிலையில் பாக்ஸின் மையப்பகுதிக்கு வெளியே ஸ்வோவேனியா அணியின்டிபன்டரால் ஃபவுல் செய்யப்பட்டார். இதனால் போர்ச்சுகல் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இலக்கை நோக்கி கிறிஸ்டியானோ ரொனால்டோவலுவாக அடித்த ஷாட், கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

56-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃப்ரீ கிக்கில் வலுவாக அடித்த ஷாட்டை கோல்கீப்பர் ஜான் ஒப்லாக் கோல் விழவிடாமல் தடுத்தார். 61-வது நிமிடத்தில் ஸ்லோவேனியா அணி கோல் அடிக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிட்டது. அந்த அணியின் வீரர் பெஞ்சமின் செஸ்கோ பந்தை விரைவாக கடத்திச் சென்ற நிலையில் போர்ச்சுகலின் 41 வயதான டிபன்டர் பெப்பே அவரை துரத்தியபடியே இருந்தார். பாக்ஸ் பகுதிக்குள் நுழைந்த பெஞ்சமின் செஸ்கோ எளிதாக கோல் அடிக்க வேண்டிய நிலையில் பந்தை வெளியே அடித்துஏமாற்றம் அளித்தார்.

88-வது நிமிடத்தில் டியோகோ ஜோட்டா விரைவாக பந்தை கடத்திச் சென்று கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கொடுக்க, அவர் இலக்கை நோக்கி வலுவாக அடித்த ஷாட்டை கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் அற்புதமாக தடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

104-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டாவை பாக்ஸ் பகுதிக்குள் ஃபவுல் செய்தார் ஸ்லோவேனியா டிபன்டர் வன்ஜா டிர்குசிக்.

இதனால் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்புவழங்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த ஷாட்டை கோல்கீப்பர் ஜான் ஒப்லாக் இடது புறம் பாய்ந்து அற்புதமாக விலக்கி விட்டார். இது போர்ச்சுகல் அணிக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது. பெனால்டி கிக்கை தவறவிட்ட ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக வீரர்கள் தேற்றினர்.

108-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ஜோவோ பால்ஹின்ஹா தலையால் முட்டிய பந்து கோல் வலையை நோக்கி பயணித்தது. ஆனால் கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் துள்ளியவாறு அதை கோல் கம்பத்துக்கு மேலே தட்டிவிட்டார். 115-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு முறை கோல் அடிக்ககிடைத்த பொன்னான வாய்ப்பைகோட்டை விட்டார் ஸ்லோவேனியாவின் பெஞ்சமின் செஸ்கோ. கோல் கீப்பர் டியோகோ கோஸ்டாதனது இடத்தை விட்டு வெகுதூரம் முன்னேறி வந்த நிலையில் நேருக்கு நேராக அவரது கைகளுக்கே பந்தை அடித்து வாய்ப்பை வீணடித்தார் பெஞ்சமின் செஸ்கோ.

கூடுதல் நேரத்திலும் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிசுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணி தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா ஆகியோர்கோல் அடித்தனர். ஸ்லோவேனியா வீரர்களான இலிசிக், ஜூரே பால்கோவெக், வெர்பிக் ஆகியோர் அடித்த ஷாட்டை போர்ச்சுகல் கோல் கீப்பர் டியோகோ கோஸ்டா அற்புதமாக தடுத்தார். கால் இறுதி சுற்றில் போர்ச்சுகல் அணி வரும் 6-ம் தேதி பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்