ஆஸ்டின்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆஸ்டின் நகரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெனிசுலா - ஜமைக்கா அணிகள் மோதின. 49-வது நிமிடத்தில் வெனிசுலா வீரர் ஜான் அரம்புருவின் கிராஸை பெற்ற எட்வர்ட் பெல்லோ 6 அடிதூரத்தில் இருந்து பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் வெனிசுலா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த தொடரில் எட்வர்ட் பெல்லோ அடித்த 2-வது கோலாக அமைந்தது. ஈக்வேடார் அணிக்குஎதிரான முதல் ஆட்டத்திலும்அவர், கோல் அடித்திருந்தார். முதல்பாதி ஆட்டத்தில் வெனிசுலா1-0 என்ற கோல் கணக்கில்முன்னிலையில் இருந்தது. 56-வது நிமிடத்தில் வெனிசுலா வீரர்யாங்கெல் ஹெரேரா உதவியுடன் பந்தை பெற்ற சாலமோன் ரான்டன் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்துஇடது காலால் உதைத்த பந்து கோல் வலையின் மையப்பகுதியை துளைத்தது. இதனால் வெனிசுலா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
சாலமோன் ரான்டன் இந்த தொடரில் அடிக்கும் 2-வது கோல் இதுவாகும். மெக்சிகோ அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் அவர்,பெனால்டி கிக்கில் கோல் அடித்திருந்தார். 85-வது நிமிடத்தில் கெர்வின் ஆண்ட்ரேட்டிடம் இருந்துபந்தை பெற்ற எரிக் ராமிரெஸ் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோல் அடித்து அசத்தினார். கடைசிவரை போராடியும் ஜமைக்கா அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது முடிவில் வெனிசுலா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வெனிசுலா அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து லீக் சுற்றை நிறைவு செய்தது. கால் இறுதி சுற்றில் வெனிசுலா,கனடாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வரும் 6-ம் தேதி காலை 6.30 மணிக்கு ஆர்லிங்கடன் நகரில் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago