இங்கிலாந்தை அச்சுறுத்திய ஸ்லோவாகியா: ஸ்பெயின் அபாரம் | Euro Cup

By செய்திப்பிரிவு

பெர்லின்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட் ஆஃப் 16’ நாக்-அவுட் சுற்று, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தொடங்கியது. இதில் இந்திய நேரப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணி அளவில் இங்கிலாந்து மற்றும் ஸ்லோவாகியா அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. ஆட்ட நேரத்தில் சுமார் 63 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் இங்கிலாந்து வீரர்கள். ஆட்டத்தின் முதல் கோலை 25-வது நிமிடத்தில் பதிவு செய்தது ஸ்லோவாகியா. அதன் பின்னர் இங்கிலாந்து முழு பலத்துடன் போராடியது. இருந்தும் அந்த அணியின் முயற்சியை ஸ்லோவாகியாவின் தடுப்பாட்ட வீரர்கள் தடுத்தனர். அவர்களது தடுப்பாட்டம் திடமாக இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அடித்த ஷாட் ஒன்று கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. அந்த அணிக்கு இந்த முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அதிர்ஷ்டம் இல்லை என்றே எதிர்பார்க்கப்பட்டது. 90 நிமிடங்கள் முடிந்த பிறகு வழங்கப்பட்ட 6 நிமிட ஸ்டாப்பேஜ் டைமின் ஐந்தாவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அபார கோல் அடித்தார் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்கம். அது ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு உயிர்ப்பை தந்தது. ஆட்டம் 1-1 என சமனில் இருந்தது.

வெற்றியாளரை தீர்மானிக்க 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் ஆட்டத்தில் நீட்டிக்கப்பட்டது. அதில் முதல் நிமிடத்திலேயே ஹாரிகேன் கோல் பதிவு செய்தார். 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. அதன் பிறகு எஞ்சி இருந்த நேரம் முழுவதும் பதில் கோல் பதிவு செய்ய ஸ்லோவாகியா முயற்சி மேற்கொண்டது. ஆனால், அது முடியாமல் போனது. இறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பெல்லிங்கம் அந்த கோலை பதிவு செய்யாமல் போயிருந்தால் இங்கிலாந்து தொடரில் இருந்து நடையை கட்டி இருக்கும்.

இதே போல ஸ்பெயின் மற்றும் ஜார்ஜியா இடையே நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜார்ஜியாவுக்கு ஸ்பெயினின் நார்மன் சுய கோல் போட்டு கொடுத்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் நடப்பு யூரோ சாம்பியன் இத்தாலியை வெளியேற்றியது சுவிட்சர்லாந்து. மற்றொரு போட்டியில் டென்மார்க்கை வீழ்த்தியது ஜெர்மனி. இன்று பிரான்ஸ் - ஜெர்மனி மற்றும் போர்ச்சுகல் - ஸ்லோவேனியா (நள்ளிரவு 12.30) பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்