“நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” - சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு

By செய்திப்பிரிவு

டெல்லி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டி20 உலகக் கோப்பையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரவீந்திர ஜடேஜா, "நன்றி. நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன். இனி அந்தப் பணி மற்ற வடிவங்களில் அதைத் தொடரும்.

டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ளார் ஜடேஜா. முன்னதாக இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஜடேஜாவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

வாசிக்க > “நாடே விரும்பியதை நிறைவேற்றினோம்!” - டி20 சாம்பியன் இந்திய வீரர்களின் ‘ரியாக்‌ஷன்’

> த்ரில் வெற்றியுடன் இந்தியா சாம்பியன்: தென் ஆப்பிரிக்கா போராடி தோல்வி | T20 WC

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்