சுவிட்சர்லாந்து - ஜெர்மனி ஆட்டம் டிரா | யூரோ கோப்பை

By செய்திப்பிரிவு

பிராங்க்பர்ட்: யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பிராங்க்பர்ட் நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெர்மனி - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து டோனி குரூஸ் அடித்த பந்தை பாக்ஸ் பகுதியின் மையப்பகுதியில் இருந்த கை ஹேவர்ட்ஸ் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். ஆனால், சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர் அற்புதமாக தடுத்தார்.

17-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ராபர்ட் ஆண்ட்ரிச் கோல் அடித்தார். ஆனால் ஜமால் முசியாலா ஃபவுல் செய்ததாக இந்த கோல் மறுக்கப்பட்டது. 28-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி தனது முதல் கோலை அடித்தது. ரெமோ பிரவுலர் உதவியுடன் பந்தை பெற்ற டான் என் டோய் தனது வலது காலால் அடித்த ஷாட் கோல் கம்பத்தின் இடது புறத்தை துளைத்தது. இதனால் சுவிட்சர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஜெர்மனி அணி பல முறை கோல் கம்பத்தை நோக்கி படையெடுத்த போதிலும் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் முதல் பாதியில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது.

2-வது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். 63-வது நிமிடத்தில் ஜெர்மனியின் டேவிட் ரவும் அடித்த வலுவான ஷாட் கோல் கம்பத்துக்கு மேலே சென்று ஏமாற்றம் அளித்தது. 74-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் குவாடோ துவா அடித்த ஷாட் ஜெர்மனி கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் கிரானிட் ஷாகாவின் கோல் அடிக்கும் முயற்சியும் தடுக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதன் 2-வது நிமிடத்தில் டேவிட் ரவும் அடித்த கிராஸை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து துள்ளியவாறு நிக்லஸ் ஃபுல்க்ரக் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. எஞ்சிய நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ஜெர்மனி தனது முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்ததால் ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. தற்போதைய ஆட்டத்தை டிராவில் முடித்ததன் மூலம் அந்த அணி 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்