அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்த ஆப்கன்: ஆஸி.யை வெளியேற்றியது | T20 WC

By செய்திப்பிரிவு

கிங்ஸ்டவுன்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 பிரிவின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் விளையாடின. இதில் 8 ரன்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கன்.

மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ஆப்கன் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம். குறிப்பிட்ட ஓவர்களுக்குள் வங்கதேசம் இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. அது இரண்டும் நடக்காத பட்சத்தில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் இருந்தது.

20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மந்தமாக இருந்தது. 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கீடு காரணமாக அவ்வப்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறையில் 19 ஓவர்களாக ஆட்டம் மாற்றப்பட்டது.

வங்கதேச பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு எதிராக களத்தில் லிட்டன் தாஸ் தடுப்பு அரணாக ஆடினார். அவரது பொறுப்பான ஆட்டம் வங்கதேச அணிக்கு நம்பிக்கை தந்தது. 41 பந்துகளில் அரைசதம் எட்டினார். கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் வங்கதேச அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது.

18-வது ஓவரில் நவீன் உல் ஹக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் டஸ்கின் அகமதுவை போல்ட் செய்தார். பந்து பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜ் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவை இருந்தது. டிஎல்எஸ் கணக்கும் ஆப்கனுக்கு சாதகமாக இருந்தது. அதுவும் இல்லை என்றால் 8 பந்துகளில் 9 ரன்கள் கொடுக்காமல் இருந்தால் போதும் என்ற சூழல் இருந்தது.

அதே ஓவரின் அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ முறையில் முஸ்தாபிசூர் ரஹ்மானை அவுட் செய்தார் நவீன். வங்கதேசம் அதனை ரிவ்யூ செய்தது. இருந்தும் அதில் அவுட் உறுதியானது. இந்தப் போட்டியில் நவீன் மற்றும் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். நவீன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் வியாழக்கிழமை அன்று தென் ஆப்பிரிக்கவுடன் அரையிறுதியில் விளையாடுகிறது ஆப்கன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்