ஆஸி.யை வீழ்த்தி ஆப்கன் அபாரம் | T20 WC ‘சூப்பர் 8’ சுற்று

By செய்திப்பிரிவு

கிங்ஸ்டவுன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப் 1 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டியில் 21 ரன்களில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீசியது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தனர். ரஹ்மானுல்லா 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அஸ்மத்துல்லா, இப்ராஹிம் ஸத்ரான், ரஷித், கரீம் ஜனத், குல்புதீன் நைப் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 51 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸி. சார்பில் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் கடந்த போட்டியிலும் விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மூன்றாவது ஓவரில் ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷை அவுட் செய்தார் நவீன். வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். நபி அவரை வெளியேற்றினார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸி.

அந்த அணிக்கு மேக்ஸ்வெல் ஆட்டம் மட்டுமே ஆறுதல் தந்தது. 41 பந்துகளில் அவர் 59 ரன்கள் எடுத்தார். ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஆஷ்டன் ஏகர், ஸாம்பா ஆகியோர் ஆட்டமிழந்தனர். 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸி.

ஆப்கானிஸ்தான் சார்பில் குல்புதீன் நைப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நவீன் 3, அஸ்மதுல்லா, நபி, ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை குல்புதீன் நைப் வென்றார். இந்தப் போட்டியில் ஆப்கன் அணி பீல்டிங் செயல்பாடு அபாரமாக இருந்தது. அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துடன் விளையாடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்