பெரு - சிலி ஆட்டம் கோல்களின்றி டிரா | கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்

By செய்திப்பிரிவு

ஆர்லிங்டன்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்லிங்டன் நகரில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிலி - பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

சிலி அணியின் கோல் கீப்பரான 41 வயது கிளாடியோ பிராவோ அபாரமாக செயல்பட்டு பெரு அணியின் கோல் அடிக்கும் முயற்சியை 4 முறை தடுத்தார். இதில் 3 முறை பெரு அணியின் ஜியான்லூகா லபடுலாவின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

மேலும் 79-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து பென்னா அடித்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் கட்டுப்படுத்திய ஜியான்லூகா லபடுலா இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். ஆனால் அதை கோல்கீப்பர் கிளாடியோ பிராவோ அற்புதமாக தட்டிவிட்டார். அவர், மீது பட்டு திரும்பிய பந்தை பாவ்லோ குரேரோ கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். அதையும் கிளாடியோ பிராவோ தடுத்தார்.

முன்னதாக 16-வது நிமிடத்தில் சிலி அணிக்கு கோல் அடிப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அணியின் வீரர் அலெக்சிஸ் சான்செஸ் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம்அளித்தது. ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இன்று நடைபெறும்ஆட்டங்களில் மெக்சிகோ - ஜமைக்கா அணிகளும் ஈக்வேடார் - வெனிசுலா அணிகளும் மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்