அமெரிக்காவுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் இங்கிலாந்து | T20 WC

By செய்திப்பிரிவு

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் குரூப் 2-ல் இங்கிலாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு அமெரிக்காவுடன் பிரிட்ஜ்டவுனில் மோதுகிறது.

இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் பின்னர் 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பெரிய அளவிலான வெற்றியை பெற்றால் மட்டுமே அரை இறுதிக்குமுன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியான நிலை உருவாகி உள்ளது. குரூப் 2-ல் தென் ஆப்பிரிக்க அணி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள போதிலும் அந்த அணி இன்னும் அரை இறுதிக்கு முன்னேறவில்லை.

அதேவேளையில் தனது முதல்ஆட்டத்தில் தோல்வி அடைந்தமேற்கு இந்தியத் தீவுகள் அணியானது நேற்று அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 129 ரன்கள் இலக்கை 10.5 ஓவர்களில் வெற்றிகரமாக அடைந்தது. 2 புள்ளிகள் பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் நிகர ரன் ரேட் 1.814 ஆக உள்ளது. இங்கிலாந்து அணியின் நிகர ரன்ரேட் 0.412 ஆக இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி குறைந்தது 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இலக்கை துரத்தும் போது குறைந்தது ஒரு ஓவரை மீதம் வைத்து வெற்றி காண வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே இங்கிலாந்து அணியால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும்.

அதேவேளையில் 4 புள்ளிகளுடன் உள்ள தென் ஆப்பிரிக்கா நாளை (24-ம் தேதி) மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதுகிறது. இருஅணிகளுக்குமே இது கடைசி ஆட்டம். இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தால் அரை இறுதி சுற்று வாய்ப்பைஇழக்கும். ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணியின் நிகர ரன் ரேட் 0.625 ஆக இருக்கிறது.

சூப்பர் 8 சுற்றை இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகளும் தலா4 புள்ளிகளுடன் நிறைவு செய்யும் பட்சத்தில் நிகர ரன் ரேட் அடிப்படையில்தான் இரு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறுவது முடிவு செய்யப்படும்.

1.814 நிகர ரன் ரேட் வைத்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினாலே 4 புள்ளிகளுடன் தனது ரன்ரேட்டை அதிகப்படுத்தி கொள்வதுடன் அரை இறுதிக்கும் முன்னேறிவிடும். இந்த பிரிவில் உள்ள அமெரிக்க அணிக்கும் அரைஇறுதி வாய்ப்பு கனவு முடிந்துவிடவில்லை.

இன்றைய ஆட்டத்தில் அமெரிக்க அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியைவீழ்த்த வேண்டும். அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா தனது கடைசி ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகளை 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

இது நிகழ்ந்தால் தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக அரை இறுதி சுற்றில் நுழைந்துவிடும். அதேவேளையில் அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இந்த நிலை உருவானால் நிகர ரன்ரேட் விகிதம்தான் அரை இறுதி வாய்ப்பை தீர்மானிக்கும். இதன்படி அமெரிக்கா அரை இறுதி சுற்றில் கால்பதிக்க வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்