யூரோ கோப்பை கால்பந்து: ஸ்லோவேக்கியாவை வென்றது உக்ரைன்

By செய்திப்பிரிவு

டசால்டாஃர்ப்: யூரோ கோப்பை கால்பந்து தொடர்ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இத்தாலி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி சுய கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

‘இ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உக்ரைன் - ஸ்லோவேக்கியா அணிகள் மோதின. இதில் உக்ரைன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 54-வதுநிமிடத்தில் மைகோலா ஷாபரென்கோவும், 80-வது நிமிடத்தில் ரோமன் யாரெம்சுக்கும் கோல் அடித்து அசத்தினர். ஸ்லோவேக்கியா அணி சார்பில் 17-வது நிமிடத்தில் இவான் ஸ்கிரான்ஸ் கோல் அடித்தார்.

யூரோ கால்பந்து தொடரில் இன்றுமாலை 6.30 மணிக்கு ஹம்பர்க் நகரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜார்ஜியா - செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு டார்ட்மண்ட் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் போர்ச்சுகல் - துருக்கி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு கோலோன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம் - ருமேனியா அணிகள் மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்