கனடாவை 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜெண்டினா | கோபா அமெரிக்கா

By செய்திப்பிரிவு

அட்லாண்டா: நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கனடாவை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது மெஸ்ஸி தலைமயிலான அர்ஜெண்டினா. ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் மார்டினெஸ் ஆகியரோ அர்ஜெண்டினாவுக்காக கோல் பதிவு செய்தனர்.

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர். தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு விளையாடும். இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, கனடாவை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நடைபெற்றது. இந்த ஆட்டம் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் மைதானத்தில் அரங்கேறியது. குரூப்-ஏ பிரிவில் உள்ள அர்ஜெண்டினா அணி இந்த தொடரில் 16-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் கண்டது.

அர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் 49 மற்றும் 88-வது நிமிடங்களில் கோல் பதிவு செய்தது. முதல் கோலை அல்வாரெஸ் பதிவு செய்தார். இரண்டாவது கோலை மார்டினெஸ் பதிவு செய்தார். இரண்டிலும் மெஸ்ஸியின் பந்து இருந்தது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதில் இத்தாலியின் ரிக்கார்டோ சுய கோல் அடித்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. டென்மார்க் - இங்கிலாந்து இடையிலான போட்டி 1 - 1 என்ற கணக்கில் சமன் ஆனது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE