பார்படாஸ்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 181 ரன்களைச் சேர்ந்துள்ளது.
பார்படாஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விராட் கோலி - ரோகித் சர்மா இணை ஓப்பனர்களாக களமிறங்கினர். 3ஆவது ஓவரிலேயே ரோகித் சர்மா 8 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து விராட் கோலியுடன் கைகோத்தார் ரிஷப் பந்த். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. 10 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டானார். அடுத்து கோலி 24 ரன்களில் கிளம்பினார். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 79 ரன்களைச் சேர்ந்த்திருந்தது.
சூர்யகுமார் யாதவ் - ஷிவம் துபே பாட்னர்ஷிப் அமைக்க துபே 10 ரன்களில் கிளம்பினார். சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட அவருக்கு ஹர்திக் பாண்டியா துணை நின்றார். ஒற்றை ஆளாக போராடி 53 ரன்களை சேர்த்த சூர்யகுமார் யாதவ் 17ஆவது ஓவரில் விக்கெட்டானார்.
» பால்கனியில் இருந்து விழுந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் உயிரிழப்பு
» T20 WC2024 | மே.இ.தீவுகளின் தோல்விக்குக் காரணமான ‘வேண்டாத’ சாதனை!
ஹர்திக் 32 ரன்களுக்கும், ஜடேஜா 7 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். கடைசி பந்தில் அக்சர் படேல் ரன் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 181 ரன்களைச் சேர்த்தது. அர்ஷ்தீப் சிங் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷீத்கான், ஃபசல்ஹக் ஃபாருகி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago