லீப்ஜிக்: ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் - எஃப்’ போட்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) போர்ச்சுகல் அணி, செக்குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-வது யூரோ கோப்பையில் விளையாடிய முதல் ஸ்டார் பிளேயர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
தன் 39-வது வயதில் யூரோ சாம்பியன்ஷிப் கோப்பையில் 6-வது முறையாகப் பங்கேற்றதும் அல்லாமல் அட்டகாசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி உலகமெங்கும் நிறைந்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு நேற்று விருந்தளித்தார்.
மேலும், இதில் சுவாரஸ்யம் என்னவெனில் 2004-ம் ஆண்டு போர்ச்சுகல் அணிக்குள் நுழைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் சொந்த மண்ணில் முதல் யூரோ கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்கொண்டதும் இதே செக்குடியரசு அணியைத்தன். இப்போது 20 ஆண்டுகள் கடந்த நிலையில் அதே அணியை தன் 6-வது யூரோ கோப்பை போட்டியில் எதிர்கொண்டுள்ளார் ரொனால்டோ.
ஆட்டத்தில் ஆங்காங்கே தனது மின்னல் வேகத்தைக் காட்டினாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், இரண்டு முயற்சிகள் அவரது ரசிகர்களின் கையை அவர்களின் இதயத்திற்கு அருகில் கொண்டு சென்றது. நேற்றைய ஆட்டத்தில் குறிப்பாக போர்ச்சுகலின் அனைத்து அட்டாக்கிங் மூவ்களிலும் ரொனால்டோ மையமாகத் திகழ்ந்தார். குறிப்பாக முதல் பாதியில் புரூனோ பெர்னாண்டஸ் அருமையாக பாஸ் செய்த பந்தை ரொனால்டோ கோல் நோக்கி அடித்த ஷாட்டை செக்குடியரசு கோல்கீப்பர் ஜிண்ட்ரிச் ஸ்டானெக் தடுத்து விட்டார்.
» சென்னையில் இரு தினங்களாக இரவில் சூறைக் காற்றுடன் பலத்த மழை
» முடங்கிய இல்லம் தேடி கல்வி திட்டம்: முறையான அறிவிப்பு வராததால் குழப்பம்
முதல் பாதி முடியும் தருணத்தில் மீண்டும் ஒரு கோல் நோக்கிய ரொனால்டோ ஷாட்டையும் ஸ்டானெக் தடுத்து விட்டார். இரண்டாம் பாதி தொடங்கிய பிறகும் ரொனால்டோவின் கோல் நோக்கிய அபாரமான ஒரு ஃப்ரீ கிக்கும் தடுக்கப்பட்டது. ஆக, 39 வயதிலும் தன் முத்திரையை ரொனால்டோ பதித்தார். துரதிர்ஷ்டவசமாக கோல் அடிக்க முடியவில்லை.
நேற்று முதல் கோலை செக்குடியரசின் லூகாச் புரோவோட் தான் ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் அடித்து முன்னிலை கொடுத்தார். இது ஒரு அபாரமான கோல் நீண்ட தூரத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த ஷாட்டை அடித்தார் லூகாச், போர்ச்சுகல் கோல்கீப்பரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு பிரமாதமான கோலாக இது அமைந்தது. ஆனால், 69-வது நிமிடத்தில் போர்ச்சுகல் ஒரு அட்டாக்கிங் நகர்வில் பந்தை செக்குடியரசு கோல் நோக்கிக் கொண்டு சென்று கோலுக்கு அருகில் சென்றது. அப்போது போர்ச்சுகலின் வீரர் தலையால் முட்டிய பந்தை கோல் கீப்பர் தடுத்த போது அது அவரது கையில் பட்டு தெறிக்க செக்குடியரசு வீரரான ராபின் ஹெரானக் காலில் பட்டு கோல் ஆனது ஆகவே இது சுய கோல். ஆட்டம் 1-1 என்று சமநிலைக்கு வந்தது.
ஆனால், கடைசியில் 92-வது நிமிடம் அதாவது ஸ்டாப்பேஜ் டைமில் 21 வயது இளம் போர்ச்சுகல் வீரர் பிரான்சிஸ்கோ கான்செய்சோ அருமையாக ஒரு கோலை அடிக்க போர்ச்சுகல் போராடி வென்றது.
ரொனால்டோவின் சாதனை ஆட்டமான இதில் சில தகவல்களை நினைவுகூர்வோம. யூரோ கோப்பை போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் இன்னமும் லீடிங் கோல் ஸ்கோரராகத் திகழ்கிறார். இவர் இதுவரை 14 கோல்களை இதில் பதிவு செய்துள்ளார். இதில் 2020 யூரோ கோப்பை தொடரில் 5 கோல்களை அடித்தும் சாதனை புரிந்துள்ளார். ஆனால், போர்ச்சுகல் அணியில் 39 வயது ரொனால்டோவை விடவும் 2 வயது மூத்த பெபேவும் நேற்று ஆடினார்.
போர்ச்சுகல் அணியில் இளம் ரத்தங்களான ஜாவோ பெலிக்ஸ், கொன்சாலோ ரேமோஸ், ரஃபேல் லியாவோ ஆகியோர்கள் கொண்ட இளம்படையினரின் மத்தியிலும் ரொனால்டோவின் ஆட்டம் இந்த வயதிலும் தனிச்சிறப்பாக அமைந்தது. குரூப் எஃப்-ன் மற்ற ஆட்டங்களில் போர்ச்சுகல் அணி ஜியார்ஜியா மற்றும் துருக்கி அணிகளைச் சந்திக்கவுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago