ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 8-வது முறையாகக் ‘களிமண் தரை மன்னன்’ நடாலுக்கு மகுடம்

By ஏஎஃப்பி

ஸ்பெயினின் ரோம் நகரில் நடந்த ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ரஃபேல் நடால், 8-வது முறையாக ரோம் மாஸ்ட்ரஸ் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ரோம் நகரில் புகழ்பெற்ற ஏடிபி அந்தஸ்து பெற்ற ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயின் வீரரும், நடப்புசாம்பியனுமான ரஃபேல் நடாலை எதிர்கொண்டார் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஜெரேவ்.

2மணிநேரம் 9 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டரை 6-1,1-6,6-3 என்ற நேர்செட்களில் தோற்கடித்தார் ரபேல் நடால்.

தொடக்கத்தில் அலெக்சாண்டர் 3-1 என்ற கணக்கில் முன்னணி வகித்தபோதிலும், இடதுகை ஆட்டக்காரரான நடால் தனது வலுவான முன்கை ஆட்டம், சர்வீஸ்களால் அலெக்சான்டரை முறியடித்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபனின் பிரதானப் போட்டிகள் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், களிமண் தரையில் விளையாடப்படும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

களிமண் தரையில் டென்னிஸ் விளையாடுவதில் முடிசூடா மன்னரான நடால், இந்த முறையும், பிரெஞ்சு ஓபனில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பிரெஞ்சு ஓபனில் 10 முறை பட்டம் வென்றுள்ளார் நடால் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் நடால் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் மீண்டும் சர்வதே டென்னிஸ் தரவரிசையில் நடால் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து நடால் கூறுகையில், இந்தப் போட்டியில் இரு முறை மழை குறுக்கிட்டது முக்கியமான ஒன்றாகும். இந்த மழை எனக்கு எந்த விதத்திலும் உதவாது என்றபோதிலும், சிறிதுநேர ஓய்வு எனக்கு தெளிவான ஷாட்கள் குறித்துச் சிந்திக்க நேரம் அளித்தது. 8-வது முறையாக ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியுடன், அடுத்த சில நாட்களில் பிரெஞ்சு ஓபனையும் நான் எதிர்கொள்கிறேன். இந்த முறையும் பிரஞெசு ஓபனில் பட்டம் வெல்ல முயற்சிப்பேன் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்