ஆடம் ஸாம்பா சுழலில் சுருண்டது நமீபியா: சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா | T20 WC

By செய்திப்பிரிவு

ஆன்டிகுவா: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி.

ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நமீபியா 17 ஓவர்களில் 72 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரர்களான மைக்கேல் வான் லிங்கன் 10, நிக்கோலஸ் டாவின் 2 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ஜான் ஃப்ரிலிங்க் 1 ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்திலும், சுமித் 3 ரன்னில் நேதன் எலிஸ் பந்திலும் நடையை கட்டினர்.

18 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நமீபியா அணி நடு ஓவர்களில் ஆடம் ஸம்பாவின் சுழலில் மேலும் ஆட்டம் கண்டது. அவரது சுழலில் ஜேன் கிரீன் (1), டேவிட் வைஸ் (1), ரூபன் ட்ரம்பெல்மான் (7), பெர்னார்டு (0) நடையை கட்டினர். 43 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து பரிதவித்த நிலையில் கேப்டன் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் சீராக ரன்கள் சேர்த்ததால் நமீபியா அணி 70 ரன்களை கடந்தது.

நிதானமாக விளையாடி வந்த எராஸ்மஸ் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தநிலையில் மார்கஸ்ஸ்டாய்னிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பென் ஷிகொங்கோ ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்ட நமீபியாவின் இன்னிங்ஸ்72 ரன்களுக்கு நிறைவடைந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்களையும் ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

73 ரன்கள் இலக்குடன் பேட் செய்த செய்த ஆஸ்திரேலிய அணி 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 8 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வைஸ் பந்தில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் கேப்டன் மிட்செல் மார்ஷ் 9 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது. 3 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் வரும் 16-ம் தேதி மோதுகிறது.

நமீபியா அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரே ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தற்போதைய தோல்வியால் நமீபியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் 15-ம் தேதி மோதுகிறது.

\

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்