தோகா: 2026-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய அளவிலான தகுதி சுற்றின் 2-வது கட்ட போட்டியில் 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த அணிகள்9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது கட்ட தகுதி சுற்று தொடருக்கு முன்னேறும்.
இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று கத்தார் அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் தோகாவில் நடைபெற்றது. 37-வது நிமிடத்தில் பிரன்டன் பெர்னாண்டஸிடம் இருந்து பந்தை பெற்ற லாலியன்ஸுவாலா சாங்க்டே அற்புதமாக கோல் அடிக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதில் கோல் அடிக்க கத்தார் அணி மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. 73-வது நிமிடத்தில் கத்தார் அணிக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது.
இதில், அப்துல்லா அலஹ்ராக் உதைத்த பந்தை யூசுப் அய்ம் தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள முயன்றார். ஆனால் இந்திய அணியின் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து அதை தடுத்தார். அப்போது பந்து அவருக்கு பின்புறம் எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்றிருந்தது. ஆனால் அதை கத்தார் வீரர் ஹஷ்மி ஹுசைன் மீண்டும் உள்ளே கொண்டு வந்து யூசுப் அய்மிடம் கொடுக்க அவர், அதை கோல் வலைக்குள் தட்டிவிட்டார்.
» ஆடம் ஸாம்பா சுழலில் சுருண்டது நமீபியா: சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா | T20 WC
» அமெரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி | T20 WC
இதற்கு இந்திய அணி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த தென் கொரிய நடுவர் கிம் வூ-சங், கோல்என்று அறிவித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. சர்ச்சைக்குரிய வகையில் அடிக்கப்பட்ட இந்த கோல் இந்திய அணிக்கு கடும் அழுத்தத்தை உருவாக்கியது.
அதேவேளையில் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்த உற்சாகத்துடன் செயல்பட்ட கத்தார் அணி போட்டி முடிவடைய 5 நிமிடங்கள் இருந்த நிலையில் 2-வது கோலை அடித்தது. இந்த கோலை முகமது அல் ராவி அடித்தார்.
முடிவில் கத்தார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடுவரின் தவறான தீர்ப்பால் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றின் 3-வது கட்டத்துக்கு முன்னேறி சாதனை படைக்கும் இந்திய அணியின் கனவு பறிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.
சர்ச்சையான முறையில் கோல்அடித்து வெற்றி பெற்ற கத்தார்அணி ‘ஏ’ பிரிவில் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அந்த அணிஏற்கெனவே 3-வது கட்ட தகுதிசுற்று தொடருக்கு தகுதி பெற்றிருந்ததால் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தின் முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ‘ஏ’ பிரிவில் இருந்து 2-வது அணியாக குவைத் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி தனதுகடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago