டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அக்சர் படேல் தன்னை ஒரு ஆல்ரவுண்டராக நிலை நிறுத்திக் கொண்டதாகக் கூறப்படும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா அணிக்குத் தேவையா, அவருக்கு பதில் குல்தீப் யாதவ்-வை அணியில் சேர்த்தால் என்ன என்று பலதரப்பிலும் கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அக்சர் படேலின் பவுலிங் பிகர்ஸ் ஜடேஜாவை விட சிறப்பாக உள்ளது. மேலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதில், ஆட்டத்தை மாற்றுவதில் ஜடேஜாவை விட சிறந்த வீரர் குல்தீப் யாதவ். ஆனால் இதுவரை சிஎஸ்கேவிலும் சரி, இந்திய அணியிலும் சரி ஜடேஜாவை பெஞ்சில் அமர வைத்தது கிடையாது. இப்போதைக்கு ஒன்றும் புரியாத யு.எஸ்.ஏ பிட்சில் ஜடேஜா இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான்.
மேற்கு இந்திய தீவுகளில் இந்திய அணி ஆட ஆரம்பிக்கும் போது குல்தீப் யாதவ்வின் தேவையே அதிகம் என்பதை ரோஹித் சர்மாவோ, ராகுல் திராவிடோ யோசிக்காமல் இருக்க முடியாது. இதையெல்லாம் மீறி ஜடேஜா லெவனில் ஆடினால் அது நிச்சயம் புற அழுத்தங்களினால்தான் என்பதை எளிதில் ஊகித்துவிடலாம்.
யு.எஸ்.ஏ அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவை உட்கார வைத்து குல்தீப் யாதவ்வை கொண்டு வருவது அந்தப் பிட்ச்களில் எப்படி வீசுவது என்பது அவருக்கு பழக்கமாகும். மேட்ச் பயிற்சியே இல்லாமல் நேரடியாக சூப்பர் 8-ல் பெரிய அணிகளுக்கு எதிராக குல்தீப்பை இறக்கினால் அது பின்னடைவைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
» நமீபியாவுடன் இன்று மோதல்: சூப்பர் 8 சுற்று முனைப்பில் ஆஸ்திரேலியா | T20 WC
» முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்: கனடாவை வீழ்த்தியது | T20 WC
அமெரிக்க அணி வீரர்கள் குல்தீப் யாதவ் போன்ற இடது கை லெக் ஸ்பின் கூக்ளி பந்து வீச்சை இதுவரை அதிகம் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள். இந்த இந்திய அணி ஒரு சமரச பாவனை அணியாகும். ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரில் ஒருவரை விடுத்து ஒருவரை அணியில் தேர்வு செய்யும் அளவுக்கு முதுகெலும்புடைய தேர்வுக்குழு இல்லை. அதே நிலைதான் ஜடேஜாவையும் தக்கவைத்துள்ளது. டி20 பேட்டராகவும் பவுலராகவும் ஜடேஜா பெரிய சாதனையாளர் அல்ல. முக்கியப் போட்டிகளை வென்று கொடுத்தவரும் அல்ல. ஆனால் அணியில் நீடிக்க வேண்டும்.
கோலி தான் ஒரு பெரிய பிஸ்தா என்று தனக்குத்தானே சுய விளம்பரம் செய்து கொள்பவரால் அயர்லாந்துக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஒன்றுமே ஆடவில்லை. ஆனால் ரோஹித் இருந்தால் நான் இருப்பேன் என்று கோலியும், கோலி இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல் என்று ரோஹித் சர்மாவும் மனக்கொக்கரிப்புக்குள் இருக்கும் வரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு என்பது அரிது தான். டெத் ஓவர்களில் ஜடேஜா பிஸ்தா வீரர் என்று இதுவரை நிரூபிக்கவில்லை. ஆகவே குல்தீப் யாதவ்வை பிளேயிங் லெவனில் ஜடேஜாவுக்குப் பதில் சேர்ப்பதுதான் இந்திய அணிக்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago