நமீபியாவுடன் இன்று மோதல்: சூப்பர் 8 சுற்று முனைப்பில் ஆஸ்திரேலியா | T20 WC

By செய்திப்பிரிவு

ஆன்டிகுவா: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று காலை 6 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதுகின்றன. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வென்றிருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஒருதரப்பு ஆட்டமாக அமைந்த அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 201 ரன்கள் குவித்திருந்தது. இதன் மூலம் நடப்பு தொடரில் 200 ரன்களை குவித்த முதல் அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா பெற்றிருந்தது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் டேவிட் வார்னர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளில் 39 ரன்கள் விளாசியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

நடப்பு தொடரில் டேவிட் வார்னர் 141.79 ஸ்டிரைக் ரேட்டுடன் ஒரு அரை சதம் உட்பட 97 ரன்கள் சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட்டும் தனது தாக்குதல் ஆட்டத்தால் நமீபியா அணிக்கு சவால் அளிக்கக்கூடும். நமீபியா 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஓமன் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்த நமீபியா, 2-வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் தோல்வி அடைந்தது.

சீனியர் ஆல்ரவுண்டரான டேவிட் வைஸ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இடது கை சுழற்பந்து வீச்சாளரான பெர்னார்ட் ஷோல்ட்ஸ், நடப்பு தொடரில் 8 ஓவர்களை வீசி ஒரே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் அவர், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்