“புதிய கண்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி; முடிவில் மாற்றம் இல்லை” - சச்சின் ட்வீட்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வென்றது. இந்நிலையில், இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி புதிய கண்டத்தில் நடைபெற்றது. ஆனாலும், ஆட்டத்தில் அதே முடிவு தான். டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக அறியப்படுகிறது. ஆனால், நியூயார்க்கில் பவுலர்களின் ஆட்டத்திறனை நம்மால் பார்க்க முடிந்தது.

இந்த போட்டி மிகவும் த்ரில்லாக இருந்தது. அதோடு அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டின் அற்புத காட்சி ஆட்டமாகவும் இது அமைந்திருந்தது. இந்திய அணி சிறப்பாக ஆடியது” என சச்சின் டெண்டுல்கர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 19 ஓவர்களில், 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. இருந்தும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இதன் மூலம் 6 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக இந்தப் போட்டியில் பந்து வீசி இருந்தனர். பும்ரா அற்புதமாக பந்து வீசி ஆட்டத்தை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE