நீதிபதி லோதா கமிட்டிப் பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்ட நம்பிக்கை அறிவுரையாளர் கோபால் சுப்பிரமணியம் தற்போதுள்ள அணித்தேர்வுக்குழு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மூத்த வீரர்கள், ஜூனியர், மற்றும் மகளிர் கிரிக்கெட் அணித்தேர்வுக்குழு 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும், 3 உறுப்பினர்கள் கொண்ட தற்போதைய குழு கலைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை மேற்கொண்டார்.
தற்போதைய அணித்தேர்வுக்குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாக கமிட்டிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதாவது பிசிசிஐ தேர்தல்கள் நடைபெறும் வரை சிஓஏ முன்னாள் வீரர்கள் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக்குழுவுடன் ஆலோசித்து இப்போதுள்ள அணித்தேர்வுக்குழு கலைக்கப்பட அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மூத்த இந்திய அணிக்கான அணித்தேர்வுக்குழு உறுப்பினர்களின் தகுதி இவ்வாறு இருக்க வேண்டும் என்று கோபால் சுப்பிரமணியம் பரிந்துரை:
அணித்தேர்வுக்குழுவுக்கு உறுப்பினராக அ. 7 டெஸ்ட் போட்டிகள் ஆடியிருக்க வேண்டும், அல்லது ஆ. 30 முதல்தரப் போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் அல்லது இ. 10 ஒருநாள் போட்டிகள் (50 ஓவர்கள்) மற்றும் 20 முதல்தர போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும். இந்தத் தகுதி பெற்ற உறுப்பினர்கள் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள், டி20 அணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் அந்தந்த அணி எப்படி விளையாடியது வீரர்களின் ஆட்டத்திறன் பற்றிய அறிக்கைகளை உயர்மட்டக் குழுவிடம் 3 மாதங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முக்கியமாக ஒவ்வொரு அணித்தேர்வு உறுப்பினரும் போட்டிகளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும். உறுப்பினர்களில் மூத்தவர் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட வேண்டும்.
அதே போல் ஜூனியர் அணித்தேர்வுக்குழு உறுப்பினர்கள் குறைந்தது 25 முதல் தரப்போட்டிகளையாவது ஆடியிருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 mins ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago