நியூயாரக்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 12 ரன்களில் வென்றது கனடா. இது ஐசிசி டி20 உலகக் கோப்பை அரங்கில் கனடாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த கனடா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கனடா. அப்போது நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஷ்ரேயாஸ் மோவ்வா இணைந்து 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிக்கோலஸ், 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ், 37 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அயர்லாந்து விரட்டியது. கனடா அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் இரண்டு பவுண்டரிகளை மட்டுமே எடுத்தது அயர்லாந்து. அந்த அளவுக்கு பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் கனடா சிறப்பாக செயல்பட்டது. முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்திருந்தது அயர்லாந்து.
» ‘ஜெயிலர் 2’ முதல் ‘கைதி 2’ வரை: 2-ம் பாகமாக உருவாகும் 20 திரைப்படங்கள்!
» எனக்கு கிடைத்த கவுரவம்: ’இந்தியன் 2’ இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
கனடா அணியின் கேப்டன் சாத் பின் ஜாபர், மிடில் ஓவர்களில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். திலோன் ஹெய்லிகர், 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றி இருந்தார். ஜெர்மி கார்டன், 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அயர்லாந்து சார்பில் மார்க் அடேர் மற்றும் ஜார்ஜ் டாக்ரெல் இணைந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. இதன் மூலம் 12 ரன்களில் கனடா வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் முடிவு இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகளில் இடம்பெற்றுள்ள குரூப் - ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் ஐசிசி-யின் இரண்டு அசோசியேட் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. தற்போது கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளன. அந்த இரண்டு அணிகளும் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.
ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸி. விரட்டி வருகிறது. ஃபின் ஆலன், கான்வே, மிட்செல், கேன் வில்லியம்சன், மார்க் சேப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தது இலங்கை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago