நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்தது.
“நாங்கள் பேட் செய்த போது முதல் ஆறு ஓவர்களை சிறப்பாக கையாளவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது. பேட்ஸ்மேன்கள் நிலையாக ரன் எடுப்பதும், பார்ட்னர்ஷிப் அமைப்பதும் அவசியமானது. பந்துவீச்சிலும் எங்களுக்கு இதே நிலை தான். முதல் 6 ஓவர்கள் சிறப்பாக அமையவில்லை.
எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறினர். அது எங்களுக்கு கடினமானது. அமெரிக்கா இந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறந்து விளங்கியது. அதனால் எங்களை விட அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டது என சொல்லலாம். அவர்களுக்கு வாழ்த்துகள்” என பாபர் அஸம் தெரிவித்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினராக இல்லாத ஒரு அணியிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது இதுவே முதல் முறை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வங்கதேசத்தை அமெரிக்கா டி20 கிரிக்கெட்டில் வீழ்த்தி இருந்தது. தற்போது பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago