‘பால் டாம்பரிங்’ விவகாரத்தில் கோபம்: ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் சாதனங்களை வீசி எறிந்த தந்தை

By ஏஎஃப்பி

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி 12 மாதங்கள் தடை பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை, அவரின் தந்தை பழைய பொருட்கள் வைக்கும் அறையில் வீசி எறிந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இந்த குற்றத்துக்கு தண்டனையாக ஸ்மித், வார்னருக்கு 12 மாதங்கள் தடையும், கேமரூன் 9 மாதங்களையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் உத்தரவிட்டது.

இந்நிலையில், மூன்று வீரர்களும் தனித்தனியாக விமானம் மூலம் சிட்னி நகரத்து வந்தடைந்தனர். அங்கு ஊடகங்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்த ஸ்மித், தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார். நாட்டையும், மக்களையும் தான் செய்த தவறால் தலைகுணிவை ஏற்படுத்திவிட்டேன். இந்த தவறுக்கு கேப்டன் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன் என்று வேதனை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல்,ஸ்மித் கண்ணீர் விட்டு அழுதபோது அவரின் அருகே நின்றிருந்த அவரின் தந்தை பீட்டர் ஆற்றுப்படுத்தினார். இந்த தடை மூலம் ஸ்மித், வார்னர் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஸ்பான்சர்ஷிப் இழப்பு, ஊதியம் இழப்பு, ஐபிஎல் போட்டியில்பங்கேற்க முடியாமல் போனது, என தனித்தனியாக ரூ.30 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஸ்மித்தும், அவரின் தந்தை பீட்டரும் மிகுந்த அதிருப்தியிலும், வேதனையிலும் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் சேனல் செவன் வெளியிட்ட செய்தியில், ஸ்மித்தை விமானநிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்த அவரின் தந்தை பீட்டர் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

ஸ்மித்தின் வீட்டில் கூடியிருந்த ஊடகத்தினரைச் சந்திக்க மறுத்த அவரின் தந்தை பீட்டர், ‘விரைவில் ஸ்மித் சரியாகிவிடுவார், அவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து நிலைத்து விளையாடுவார் நீங்கள் செல்லலாம்’ என்று கோபமாகத் தெரிவித்தார்.

அதன்பின், காரில் இருந்து ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை எடுத்த பீட்டர், வீட்டில் பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறையில் வீசி எறிந்துவிட்டு, கோபத்துடன் வீட்டுக்குள் சென்றார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்