மேடு பள்ளமான ரோடு போலவா பிட்ச் போடுவது? - வாசிம் ஜாஃபர், மைக்கேல் வான் தாக்கு

By ஆர்.முத்துக்குமார்

டி20 உலகக் கோப்பையின் 8-வது போட்டியில் நேற்று இந்தியா அயர்லாந்து அணிகள் மோதின. இதில் அயர்லாந்து பிட்சின் வேகப்பந்து வீச்சு சாதகத் தன்மையினாலும் சீரற்ற பவுன்சினாலும் பாண்டியா, பும்ரா, அர்ஸ்தீப், சிராஜ் கூட்டணி வேகப்பந்து வீச்சை தாங்க முடியாமல் 97 ரன்களுக்குச் சுருண்டது. இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா இலங்கையை 77 ரன்களுக்குச் சுருட்டியது.

பேட்டிங் ஆடுவது பிரம்மப் பிரயத்தனமாகப் போய்விட்டது. அன்று நோர்க்கியா இலங்கையை மடித்தார். நேற்று பிட்ச் அயர்லாந்தை மடித்தது. பிட்சே மடிப்பு மலை போல் இருந்ததே காரணம். இரு அணி வீரர்களுமே பிட்சில் ‘cat on a hot tin roof’ போல் நாட்டியம் ஆட வேண்டியிருந்தது. இரு அணி வீரர்களின் உடலையுமே பந்துகள் பதம் பார்த்தன. ரோகித் சர்மாவே அடி வாங்கி ரிட்டையர்ட் ஆனார். இதே பிட்சில்தான் இந்தியா-பாகிஸ்தான் போட்டியும் நடைபெறுகிறது.

இப்படி பிட்ச் போட்டால் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட இரு அணிகளும் மோதும் போது மைதானத்தில் ஆம்புலன்ஸை நிறுத்துவது நல்லது என்றே தோன்றுகிறது. இந்தப் பிட்ச்கள் ட்ராப் இன் பிட்ச்கள் ஆகும். வெளியே தயார் செய்து எடுத்து வந்து மைதானத்தில் பதிப்பதாகும். இப்படிப்பட்ட பிட்ச்களில் நார்மலாக ஆட கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில், இப்போது உள்ள பெர்த் ஆப்டஸ் மைதானங்கலில் ட்ராப் இன் பிட்ச்கள் உள்ளன. ஆனால் ஆஸ்திரேலியாவில் கால அவகாசம் எடுத்து பிட்சை நன்றாகத் தயார் செய்த பிறகே போட்டிக்கு அனுமதிப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் கிரிக்கெட்டை பரப்ப வேண்டும் என்ற வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டுமே அங்கு உலகக்கோப்பையை வைத்துள்ள ஐசிசி, பிட்ச்களின் தரநிலைகளை சோதித்துப் பார்த்து விளையாட அனுமதிக்க நேரமில்லை போலும்.

பிட்ச்கள் குறித்து மைக்கேல் வான் தன் கடும் விமர்சனங்களை முன் வைத்த போது, “அமெரிக்காவில் கிரிக்கெட்டை விற்பனை செய்வது கிரேட். பிடித்திருக்கிறது. ஆனால், அதற்காக வீரர்கள் இத்தகைய கீழ்த்தரமான பிட்ச்களில் ஆட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடினமாக உழைத்து உலகக்கோப்பைக்கு வந்து ஆட வேண்டியுள்ளது. இங்கு வந்தால் இப்படியான பிட்ச் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்” என்று சாடியுள்ளார்.

முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர், இன்னும் கிண்டலாக, “அமெரிக்க ரசிகர்களை டெஸ்ட் மேட்ச்களை பார்க்க இப்போதே தயார் செய்கிறார்கள் போலும். அப்படியென்றால் இது அபாரமான பிட்ச் தான். ஆனால் இது டி20 அல்லவா” என்ற தொனியில் சாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இப்படிப்பட்ட பிட்சை போட்டு ஆடுவது இரு அணி வீரர்களுக்குமே அபாயகரமானது. ஐசிசி காதில் விமர்சனங்கள் விழுமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்