பார்படோஸ்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா மற்றும் ஓமன் அணி இடையிலான லீக் போட்டி சமனில் முடிந்தது. வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் நமீபியா வெற்றி பெற்றது.
பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நமீபியா வீரர் ரூபன் டிரம்பெல்மேன் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய நமீபியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜான் ஃப்ரைலிங்க் 45 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் டேவின் 24 ரன்கள் எடுத்தார். ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
இதில் முதலில் பேட் செய்த நமீபியா அணி 6 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தது. 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஓமன் களம் கண்டது. அந்த அணி 6 பந்துகளில் 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் நமீபியா இதில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய டேவிட் வைஸ், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
» வணிகவழி வேளாண் சுற்றுலா 10: வேளாண் சுற்றுலாவில் சுற்றுலாவாசிகளின் எதிர்பார்ப்பு
» கிருத்திகா உதயநிதி - ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’: கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பப்புவா நியூ கினியா, நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான இரண்டு லீக் போட்டிகளும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இந்த இரண்டு ஆட்டங்களுக்கான ஆடுகளமும் ஸ்லோவாக இருப்பதாக தெரிகிறது. அதனால் இங்கு ரன் குவிப்பது சற்று சவாலாக உள்ளது என்பதை ஆட்டத்தை பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. வரும் நாட்களில் மேற்கு இந்தியத் தீவுகளில் தான் சூப்பர் 8 சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago