சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக நேற்று அறிவித்திருந்தார். இதையொட்டி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தினேஷ் கார்த்திக்-க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: "கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் ஓய்வு செய்தியை படித்தறிந்தேன். அவர் மிகவும் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை புரிந்து கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளில் விளையாடிய அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை பார்த்திருக்கிறோம்.
வாழ்கையில் பல்வேறு தடைகள் மற்றும் சவால்களை சந்தித்தபோதிலும், தினேஷ் கார்த்திக் ஒரு பீனிக்ஸ் பறவையை போல மீண்டு வந்திருக்கிறார். விளையாட்டுக்காக அவரது அர்ப்பணிப்பு என்பது எப்போதும் நம்மை ஊக்குவிக்கும். வாழ்க்கையின் அவரது அடுத்தகட்ட இன்னிங்ஸிலும் செழித்து வாழவும், எதிர்கால முயற்சிக்கும் வாழ்த்துகிறேன்." என்று அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago