“ஒட்டுமொத்த செஸ் உலகமும் வியப்பில் ஆழ்ந்துள்ளது” - பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: செஸ் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா!. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் 'கிளாசிக்கல் செஸ்' வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.

டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும், பிரக்ஞானந்தா! ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது!" என்று வாழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்