புதுடெல்லி: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் ஜெய்ஸ்வால் களம் காண வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.
“கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்க வேண்டும் என்பது எனது கருத்து. பேட்டிங் ஆர்டரில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆடாலம். ரோகித், சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆடுவார். அதனால் அவருக்கு அந்த இடத்தில் ஆடுவதில் சிக்கல் இருக்காது” என ஜாபர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட 20 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. மொத்தம் 55 போட்டிகள். குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது.
இந்திய அணி: ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், சிராஜ்.
» புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை: சிறை நிர்வாகம் தகவல் @ ஐகோர்ட்
» துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 30 - ஜூன் 5
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago