சபைனா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வலுவான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி 3-0 என்று முழு தொடரையும் வென்று ஒரு அரிதான ஒயிட் வாஷை தென் ஆப்பிரிக்காவுக்கு பரிசாக அளித்தது.
கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா 11 முடிவு தெரிந்த டி20 போட்டிகளில் 2-ல் தான் வென்றுள்ளது என்பதும் அவர்களுக்கு கவலையளிக்கும் அம்சமே.
தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ரஸி வான் டெர் டசனுக்கு பேரிடியாக இந்தத் தொல்வி அமைந்தது. மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் பிராண்டன் கிங் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் கிரிக்கெட் அரங்கில் ஒரு சக்தியாக எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையையும் விதைத்துள்ளது.
டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் ரஸீ வான் டெர் டசன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 20 ஓவர்களில் சுமாரான 163/7 என்ற ஸ்கோரை எட்டினர். ஆனால் அதன் பிறகு நடந்தது, ஒரு சன்ரைசர்ஸ் ரக பேட்டிங் அதகளமாகும். தொடர்ந்து ஆடிய மேற்கு இந்திய தீவுகள் காட்டடி பவர் பேட்டிங்கில் 13.5 ஓவர்களில் 165/2 என்று இலக்கை ஊதித்தள்ளியதோடு தென் ஆப்பிரிக்காவின் இதயத்தையும் சுக்குநூறாக உடைத்தது.
» 3-வது முறையாக கொல்கத்தா சாம்பியன்: ஐபிஎல் இறுதியில் வீழ்ந்த ஹைதராபாத் ‘மோசமான’ சாதனை!
» சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் @ IPL 2024
இதில் வேடிக்கை என்னவெனில் 163 ரன்கள் இலக்கை எதிர்த்து கேப்டன் பிராண்டன் கிங் (44), ஜான்சன் சார்லஸ் (69) இணைந்து முதல் விக்கெட்டுக்காக 6.2 ஓவர்களில் 92 ரன்களை விளாசியதே. ஆண்ட்ரே நோர்க்கியா, போர்ட்டுவின், கூட்ஸி போன்ற பிரதான பவுலர்களுக்கே செம சாத்து விழுந்தது. கூட்சி மட்டும்தான் 3 ஓவர்கள் வீசினார் மற்ற பவுலர்கள் 2 ஓவர்களுடனேயே முடிக்க வேண்டிய அளவுக்கு காட்டடி தர்பாரை நிகழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.
பிராண்டன் கிங் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 44 ரன்களை விளாச, ஜான்சன் சார்லஸ் 26 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 69 ரன்கள். இவரது ஸ்ட்ரைக் ரேட் 265.38. இவர்கள் இருவர் போதாதென்று கைல் மேயர்ஸ் இறங்கி 4 சிக்சர்களூடன் 36 ரன்களை விளாசி வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.
தென் ஆப்பிரிக்க லைன் அப்பில் எய்டன் மார்க்ரம், கிளாசன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், மில்லர் போன்ற வீரர்கள் இல்லை. இவர்கள் உலகக் கோப்பை அணிக்குத் திரும்பி விடுவார்கள் என்பது வேறு விஷயம். ஆனாலும் தென் ஆப்பிரிக்காவை இப்படி ஒயிட் வாஷ் ஆகும் அளவுக்கு விடலாமா என்பதே கேள்வி. குவிண்டன் டி காக் மோசமான பார்மில் உள்ளார். 3 இன்னிங்ஸ்களில் 64 ரன்களையே எடுத்துள்ளார். பவுலிங்கில் அதிவேக நோர்க்கியாவும் ஓவருக்கு 12.16 என்ற ரன் விகிதத்தில் விட்டுக் கொடுக்கிறார்.
இந்தப் போட்டியில் வான் டெர் டசன் தான் அதிகபட்சமாக 51 ரன்களை எடுத்தார். இதில் 5 சிக்சர்கள் அடக்கம். மேலும் முல்டருடன் சேர்ந்த 8 ஓவர்களில் 71 ரன்களைச் சேர்த்ததால் இந்தத் தோல்வியோடு முடிந்தது. இல்லையெனில் இன்னும் மோசமான தோல்வியைத் தழுவியிருக்கும். நேற்று கோல்டன் ஆர்ம் ஷமார் ஜோஸப் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆபெட் மெக்காய் 3/39 என்றும் தென் ஆப்பிரிக்காவை முடக்கினர்.
நேற்று சாத்தி எடுத்த ஜான்சன் சார்லஸ்தான் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 46 பந்துகளில் 118 ரன்களை விளாசி வெற்றி பெறச் செய்தார், ஆகவே தென் ஆப்பிரிக்க பவுலிங்கை சார்லஸுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. மோட்டியும் அருமையாக வீசி குவிண்டன் டி காக்கை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் மேத்யூ ப்ரீட்ஸ்கே விக்கெட்டையும் வீழ்த்தினார் மோட்டி. மோட்டிதான் தொடர் நாயகன், ஆட்ட நாயகன் சார்லஸ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது என்பதற்கு இந்தத் தொடர் ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago