சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 10.3 ஓவர்களில் இலக்கை கடந்து கொல்கத்தா அணி அசத்தியது.
சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 113 ரன்கள் எடுத்தது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொல்கத்தா அணி விரட்டியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இதில் நரைனை 6 ரன்களில் வெளியேற்றினார் கம்மின்ஸ்.
அதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் குர்பாஸ் இணைந்து ரன் குவித்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அதன் பலனாக பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. குர்பாஸ் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
10.3 ஓவர்கள் முடிவில் அந்த அணி இலக்கையும் எட்டி அசத்தியது. இதன் மூலம் அந்த அணி கோப்பை வென்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2014-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.
» மதுரை - துபாய் ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம் ரத்து: பயணிகள் கடும் வாக்குவாதம்
» களைகட்டிய ஏற்காடு கோடை விழா நிறைவு: 2 லட்சம் பேர் கண்டு ரசிப்பு
முதல் இன்னிங்ஸில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறினர். அபிஷேக், 2 ரன்களில் வெளியேறினார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஹெட் வெளியேறினார். தொடர்ந்து ராகுல் திரிபாதியும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து தடுமாறியது அந்த அணி.
நிதிஷ் ரெட்டி, மார்க்ரம், ஷாபாஸ் அகமது, அப்துல் சமாத், கிளாசன் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago