ஹென்ரிச் கிளாசன் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் 2-ம் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 175 ரன்களைச் சேர்த்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியின் ஓப்பனராக களமிறங்கிய அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் என அமோகமாக ஆரம்பித்தார். ஆனால் முதல் ஓவரிலேயே 12 ரன்னுக்கு அவுட்டாகி நடையைக் கட்டினார்.

2 சிக்சர்களை விளாசி நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் திரிபாதி 5ஆவது ஓவரில் 37 ரன்களுக்கு விக்கெட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த ஏய்டன் மார்க்ராம் அதே ஓவரில் 1 ரன்னுக்கு அவுட். பொறுப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 34 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 99 ரன்களைச் சேர்த்திருந்தது.

ஒருபுறம் ஹென்ரிச் கிளாசன் மட்டும் நின்று ஆட, மறுபுறம் வந்த நிதிஷ் ரெட்டி 5 ரன்களில் அவுட். அவருக்கு அடுத்து வந்த அப்துல் சமது டக் அவுட் என வீரர்கள் சொதப்பினர். கிளாசன் மட்டும் போராடி அரைசதம் கடந்து 19ஆவது ஓவரில் போல்டானார்.

ஷாபாஸ் அகமது 18 ரன்கள், ஜெய்தேவ் உனத்கட் 5 ரன்களில் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 175 ரன்களைச் சேர்த்தது. பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான் அணி தரப்பில் டிரன்ட் போல்டு, அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்