எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: பெங்களூருவின் வெற்றி நடை தொடருமா?

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு கட்டத்தில் லீக்சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும் சூழ்நிலையில் இருந்தது. ஆனால் தொடர்ச்சியான 4 தோல்விகள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது ஆகியவற்றால் லீக் சுற்றில் 3-வது இடத்தை பிடித்தது. மறுபுறம் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லீக் சுற்றின் முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி அடைந்த நிலையில் அதன் பின்னர் போராட்ட குணத்துடன் செயல்பட்டு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளியேற்றி பிளே ஆஃப் சுற்றில் கடைசிஅணியாக கால்பதித்தது.

ராஜஸ்தான் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் வெற்றி பெறாத நிலையில், தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்த பெங்களூரு அணியை இன்றைய ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் அணி தொடரின் முதல் பாதியில் அதிரடியாக விளையாடி வெற்றிகளை குவித்த நிலையில் பிற்பாதியில் தேக்க நிலையை சந்தித்தது. அதிலும் அந்த அணி விளையாடிய கடைசி 4 ஆட்டங்களிலும் பேட்டிங், பந்து வீச்சில் உள்ள பலவீனங்கள் வெளிப்பட்டன.

அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பது பலவீனமாகி உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அதன் பின்னர் அவரிடம் இருந்து பெரியஅளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. கடந்த சில ஆட்டங்களில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரும் மட்டை வீச்சில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த தவறியதால் தொடர்ச்சியான தோல்விகளை தடுக்க முடியாமல் போனது.

இன்றைய ஆட்டம் முக்கியவத்துவம் வாய்ந்தது என்பதால் இவர்கள் 3 பேரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். பின் வரிசையில் ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பொவல் ஆகியோரும் பொறுப்புடன் செயல்பட்டால் அணியின் பலம் அதிகரிக்கும். இன்றையபோட்டி நடைபெறும் நரேந்திரமோடி மைதானம் மற்றஆடுகளங்களை போன்றுரன் குவிப்புக்கு மட்டுமேசாதகமாக இருக்காது, பந்துவீச்சுக்கும் கைகொடுக்கும். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ்அணியின் பந்து வீச்சு துறை துடிப்புடன் செயல்படும் பட்சத்தில் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் தரக்கூடும்.

பெங்களூரு அணியின் பேட்டிங்கில் விராட் கோலி ரன் இயந்திரமாக திகழ்ந்து வருகிறார். நடப்பு சீசனில் 14 ஆட்டங்களில் ஒரு சதம், 5 அரைசதம் என 708 ரன்கள் வேட்டையாடி உள்ள அவரிடம் இருந்து மேலும் சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். டு பிளெஸ்ஸிஸும் பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. நடுவரிசையில் 5 அரை சதங்களுடன் 361 ரன்கள் சேர்த்துள்ள ரஜத் பட்டிதார், கேமரூன் கிரீன் ஆகியோரும் பின் வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் யாஷ் தயாள் சீரான திறனை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் யாஷ் தயாள் முக்கிய பங்கு வகித்தார். ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அவர், நெருக்கடி அளிக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். அதேவேளையில் வெற்றி பெறும் அணி வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்