மும்பை அணிக்கு ‘பை பை’ உறுதியா? - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ரோகித் சர்மா கோபத்தின் பின்னணி

By செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோகித் சர்மா மும்பை கேப்டன் பொறுப்பில் மாற்றப்பட்டதால் இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. இதற்கிடையே, ஐபிஎல் ஒளிபரப்பு பார்னட்ரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து ரோகித் சர்மா காட்டமாக வெளியிட்ட எக்ஸ் பதிவு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

அந்தப் பதிவில், “கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் வெளிப்படையாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் பயிற்சி மற்றும் போட்டி நாட்களில் நண்பர்கள் மற்றும் ஊழியர்களுடன் தனியுரிமையில் வீரர்கள் பேசும் உரையாடல்கள் கேமராக்களில் பதிவு செய்யப்படுகின்றன.

எனது உரையாடல்களை பதிவு செய்ய வேண்டாம் என ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கேட்டுக் கொண்ட பிறகும் அது ஒளிபரப்பப்பட்டது. இது தனியுரிமையை மீறும் செயல். பிரத்யேக உள்ளடக்கத்தை பெற வேண்டும் என்பதற்காக இப்படி செய்வது ஒருநாள் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இடையேயான நம்பிக்கையை உடைக்கும். எனவே நல்லுணர்வு மட்டுமே மேலோங்கட்டும்” என்று கூறியிருந்தார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது கோபம் ஏன்? - மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது தனது முன்னாள் சக வீரரும் தற்போதைய கொல்கத்தா பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் உடன் நீண்ட பேசினார் ரோகித் சர்மா. இந்த உரையாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கவர் செய்து வெளியிட்டது. அந்த உரையாடலில் அபிஷேக் நாயரிடம் "எல்லாம் ஒவ்வொன்றாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொன்றும் அவர்களைப் பொறுத்தது, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், எதுவாக இருந்தாலும் அது என் வீடு. நான் உருவாக்கிய கோவில் அது, மாறிக்கொண்டு இருக்கிறது. எனவே, இதுவே எனது கடைசி" என்று தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இந்த ஆண்டு அதிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது. இதனால் இந்த சீசனுக்கு பிறகு ரோகித் வேறு அணி மாறுவார் என்று கூறப்பட்ட நிலையில்தான் அதற்கேற்ப ரோகித் சர்மா அபிஷேக் நாயரிடம் பேசியதை தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. இதையடுத்தே, ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு எதிராக இவ்வளவு காட்டமாக பதிவிட்டுள்ளார் ரோகித் சர்மா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்