சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்தப் போட்டியை நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு அதை கண்டு மனதளவில் உடைந்து போனார்.
அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் கமெண்ட் மூலம் ராயுடுவை ஆர்சிபி ரசிகர்கள் வதைத்துள்ளனர். இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெல்லும் என ராயுடு கணித்திருந்தார்.
அவர் மட்டுமல்லாது பெரும்பாலானவர்கள் சிஎஸ்கே தான் வெற்றி பெறும் என சொல்லி இருந்தனர். ஏனெனில், இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அதனால் அது சாத்தியம் இல்லை என சொல்லப்பட்டது. அது அனைத்தையும் தகர்த்து நம்பமுடியாத வெற்றியை வசமாக்கி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது ஆர்சிபி.
» கூட்ட நெரிசலால் பேரணியில் இருந்து பாதியில் வெளியேறிய ராகுல், அகிலேஷ்
» தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘சாகர் கவாச்’ ஒத்திகை: தலைமைச் செயலர் ஆலோசனை
இந்தப் போட்டியில் சிஎஸ்கே, மேற்கொண்டு 10 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து இருக்கும். அதை கண்டு தான் ராயுடு மனம் உடைந்து போனார். அந்த தருணத்தில் அவர் மட்டுமல்லாது ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகரும் ராயுடுவின் மனநிலையில் தான் இருந்திருப்பார்கள்.
‘இந்தப் போட்டியை எப்படியும் ஆர்சிபி வெல்லாது என ராயுடு சொன்னார். இப்போது அவர் கலங்குகிறார். அதை நான் ரசிக்கிறேன்’, ‘சிஎஸ்கே சார்பு நிலையில் அவர் பேசியதற்கு இது வேண்டிய ஒன்றுதான்’ என ராயுடுவை விமர்சிக்கும் விதமாக கமெண்ட்களை ஆர்சிபி ஆதவாளர்கள் அந்த வீடியோவில் பதிவிட்டனர். சிலர் ஊசி போடுவது போன்ற மீம்களையும் கமெண்ட் பிரிவில் பகிர்ந்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago