ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 69-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 214 ரன்கள் குவித்தது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியை ஜிதேஷ் சர்மா வழிநடத்துகிறார்.
பிரப்சிம்ரன் சிங் மற்றும் அதர்வா டைடே இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 46 ரன்களில் அதர்வா டைடே ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரூசோவ் பேட் செய்ய வந்தார். அவருடன் 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் பிரப்சிம்ரன் சிங். அவர் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.
ஷஷாங் சிங், 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரூசோவ், 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசுதோஷ் சர்மா, 2 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது பஞ்சாப். ஜிதேஷ் சர்மா, 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
» 49 தொகுதிகளில் நாளை காலை தொடங்குகிறது 5ம் கட்டத் தேர்தல் - வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
ஹைதராபாத் அணி சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மின்ஸ் மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது புள்ளிகள் பட்டியலில் டாப் 2 இடங்களுக்கு முன்னேற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு உதவும். அந்த அணி 215 ரன்கள் இலக்கை விரட்டி வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago