பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
தாய்லாந்தின் பாங்காக் நகரில்நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மெய்ராபா லுவாங் மைஸ்னம், டென்மார்க்கின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார். 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மெய்ராபா லுவாங் மைஸ்னம் 21-14, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிசுற்றில் தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரணுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் 22 வய தானமெய்ராபா லுவாங் மைஸ்னம்.
ஆடவர் இரட்டையர் பிரிவு2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது 69-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜி சவோ நான், ஹெங் வெய் ஹன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி மலேசியாவின் ஜூனைதி ஆரிப், ராய் கிங் யப் ஜோடியுடன் மோதுகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஸ்மிதா சாலிஹா, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளசீனாவின் ஹன் யி-யை எதிர்த்து விளையாடினார். இதில் அஸ்மிதா சாலிஹா 15-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சதீஷ் கருணாகரன், ஆத்யா வரியத் ஜோடி 10-21,17-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ரினோவ் ரிவால்டி, பிதா ஹனிங்டியாஸ் மென்டாரி ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
» அணியில் ஒரு கருப்பின வீரர் மட்டுமே! - பிற்போக்காக செயல்படுகிறதா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்?
» “தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்” - மைக் ஹஸ்ஸி நம்பிக்கை
மகளிர் இரட்டையர் பிரிவு 2-வதுசுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் ஹங் என் சூ, லின் யூ ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago