‘Rain Rain Go Away’ - ஆர்சிபி ரசிகர்கள் ட்வீட் | மழையால் கலையும் பிளே-ஆஃப் கனவு!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: வரும் 18-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான லீக் போட்டியில் விளையாட உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டி இந்நிலையில், போட்டி நடைபெறும் நாளன்று மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தச் சூழலில் மழை குறித்து ஆர்சிபி ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ‘மழை பொழிவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாதகமாக முடியும். அவர்கள் டாப் 2 இடங்களை பிடிக்க முடியாமல் போகும்’, ‘மழை பொழியும் என வானிலை தகவல்கள் வந்துள்ள நிலையில் போட்டியை முன்கூட்டியே நடத்தலாமே’, ‘மழை பொழிய வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் வேண்டினால் அது அவர்களுக்கு தான் அவமதிப்பு அளிக்கின்ற விஷயமாக அமையும்’ என அந்தப் பதிவுகள் நீள்கின்றன.

அதே நேரத்தில் சிஎஸ்கே ரசிகர்கள், மழை சார்ந்த பதிவுகளை கமெண்ட் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. இந்தப் போட்டி நடைபெற்று, அதில் ஆர்சிபி வெற்றி பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரன் ரேட் அடிப்படையில் முன்னேற வேண்டும். உதாரணமாக பெங்களூரு அணி 200 ரன்கள் குவித்தால் குறைந்தது 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் 200 ரன்கள் இலக்கை துரத்தினால் 18.1 ஓவரில் வெற்றி பெற வேண்டும். அது நடந்தால் மட்டுமே அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் விளையாடி 0.387 நிகர ரன் ரேட்டுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி சிஎஸ்கே 0.528 நிகர ரன் ரேட்டுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE