லக்னோவை டெல்லி வீழ்த்தியதன் விளைவு: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் நிலை என்ன?

By ஆர்.முத்துக்குமார்

டெல்லியில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 64-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ரன்களில் வீழ்த்தி 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுடன் இணைந்துள்ளது.

ஆனால், டெல்லியின் நெட் ரன் ரேட் ‘-0.377’ ஆக உள்ளது அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு சாதகம் அளிக்காது. லக்னோவுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதன் மூலம் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் ரேஸ் மூன்று அணிகளுக்கு இடையில் குறுகியுள்ளது.

அதாவது சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்புக்காக மோத வேண்டும்.

சிஎஸ்கே, ஆர்சிபியை வீழ்த்தி 16 புள்ளிகள் பெற்றால் அதே வேளையில் சன்ரைசர்ஸ் தன் கடைசி 2 போட்டிகளில் பெரிய இடைவெளியில் தோற்றால் சன்ரைசர்ஸின் நெட் ரன் ரேட் டெல்லிக்கும் கீழ் இறங்கினால் டெல்லி தகுதி பெறலாம். இதற்கு சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவ வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை.

லக்னோவுக்கு மும்பையுடன் இன்னும் ஒரு போட்டி உள்ளது. அதில் லக்னோ 200 ரன்களை அடித்து மும்பையை 100 ரன்களுக்குள் சுருட்டினாலும் நெட் ரன் ரேட் மைனஸில்தான் இருக்கும். ஆக, லக்னோ அணி முதல் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதுதான்.

சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டம் மழையால் காலியாகி ஒரு புள்ளியை பெற்றால்தான் ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு மேலே அட்டவணையில் செல்ல முடியும். அதாவது சிஎஸ்கேவை கடந்து ஆர்சிபி அட்டவணையில் முன்னேற சிஎஸ்கேவை ஆர்சிபி 200 ரன்கள் அடித்த பிறகு 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அதே சமயத்தில் 200 ரன்களை ஆர்சிபி விரட்ட நேரிட்டால் 18.1 ஓவர்களில் முடிக்க வேண்டும். அதுவும் வின்னிங் ஷாட் ரன்கள் முக்கியம்.

சன்ரைசர்ஸ் தன் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் தான் 14 புள்ளிகளில் தேங்கும். அப்போது ஆர்சிபி உள்ளே நுழையும். சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டி வாஷ் அவுட் ஆனாலோ, ஆர்சிபி தோற்றலோ ஆர்சிபி வெளியே போக வேண்டியதுதான்.

சிஎஸ்கேவைப் பொறுத்தவரை ஆர்சிபியை வீழ்த்தினால் பிளே ஆஃப் உறுதி. அல்லது 200 ரன்கள் இலக்கிற்கு எதிராக சிஎஸ்கே 18 ரன்களுக்கும் குறைவான இடைவெளியில் தோற்க வேண்டும். இப்படி ஆனால் ஆர்சிபி நெட் ரன் ரேட்டை விட சிஎஸ்கே நெட் ரன் ரேட் நல்ல நிலையில் இருக்கும். அல்லது சிஎஸ்கே பெரிய இடைவெளியில் படுதோல்வி கண்டு விட்டால் சன்ரைசர்ஸ் தன் 2 போட்டிகளிலும் தோல்வியடைய பிரார்த்திக்க வேண்டியதுதான்.

சன்ரைசர்ஸ் தன் 2 போட்டிகளிலும் தோல்வி கண்டு சிஎஸ்கேவின் நெட் ரன் ரேட்டுக்குக் கீழ் இறங்கிவிட்டால் சிஎஸ்கே, ஆர்சிபி இரு அணிகளும் பிளே ஆஃப் செல்லும். சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரே ஒரு புள்ளி கிடைத்தால் போதும் தகுதி பெற்று விடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்