“டி20 உலகக் கோப்பையில் ரோகித் சிறப்பாக விளையாடுவார்” - கங்குலி கணிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

“உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி மிகச் சிறந்த அணியாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். முக்கிய தொடர்களில் சிறந்த செயல்திறனை அவர் வெளிப்படுத்துவார். ஏனெனில், அவர் பிக் மேட்ச் பிளேயர்” என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களம் காண வேண்டும் என அண்மையில் கங்குலி சொல்லி இருந்தார். பந்து வீச்சில் பும்ராவின் திறனையும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் 13 இன்னிங்ஸ் ஆடியுள்ள ரோகித் சர்மா, 349 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். டி20 உலகக் கோப்பை தொடரில் 36 இன்னிங்ஸ் ஆடியுள்ள ரோகித், 963 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 அரைசதம் பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்