CSK vs RR | சேப்பாக்கத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே - ருதுராஜ் பொறுப்பான ஆட்டம்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 61-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ரியான் பராக், 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரல் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 24, பட்லர் 21 ரன்கள் எடுத்தனர். சிஎஸ்கே சார்பில் சிமர்ஜித் சிங் 3 மற்றும் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது. ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ரச்சின், 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை அஸ்வின் வெளியேற்றினார். மிட்செல், 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரை சஹல் வெளியேற்றினார். பர்கர் பந்துவீச்சில் மொயில் ஆட்டமிழந்தார்.

ஷிவம் துபேவை 18 ரன்களில் அவுட் செய்தார் அஸ்வின். ஜடேஜா ஃபீல்டிங்கை தடுத்த காரணத்துக்காக அவுட் கொடுக்கப்பாத்தார். ஆவேஷ் கான் வீசிய 16-வது ஓவரில் ரன் ஓட முயன்ற போது இது நடந்தது. ஸ்டம்பை தகர்க்க ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்தை த்ரோ அடித்தார். அதை தடுக்கும் வகையில் ஜடேஜா ஓடினார். அது அவரது இடது கை பகுதியில் பட்டது. தொடர்ந்து மூன்றாவது நடுவர் பரிசீலனையில் பந்தை பார்த்து ஜடேஜா அதை செய்ததாக சொல்லி அவுட் கொடுக்கப்பட்டது.

இம்பேக்ட் வீரராக சமீர் ரிஸ்வி களம் கண்டார். 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் மூலம் 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ், 41 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஸ்வி, 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று, ரன் ரைட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை முந்தியுள்ளது. அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்