கிராண்ட் செஸ் டூர் தொடர் - நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

By செய்திப்பிரிவு

போலந்து: போலந்தில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் என உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இத்தோல்வியின் மூலம் புள்ளிகள் குறைந்து தொடருக்கான தரவரிசையில் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சீனாவைச் சேர்ந்த Wei Yi முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா 3ம் இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்